/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ஆன்லைன் லிங்க்' மோசடி ரூ.1.66 லட்சம் திருட்டு
/
'ஆன்லைன் லிங்க்' மோசடி ரூ.1.66 லட்சம் திருட்டு
ADDED : ஜன 01, 2024 06:25 AM
புழல்: சென்னை, புழல் அடுத்த சூரப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் அருள்மொழி, 42. சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போனுக்கு வந்த 'டெலிகிராம்' செயலி வாயிலாக, ஒரு இணைப்பில் சிக்கியுள்ளார்.
அதில் கொடுக்கப்பட்ட, 'டாஸ்க்'குகளை முடிக்க வேண்டும் என்ற நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்த 62,600 ரூபாய் திருடு போனது.
அதேபோல், புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்த நுஸ்ரேத் பாத்திமா, 46, என்பவரிடம் 48,000 ரூபாய், பாஸ்கரன், 38, என்பவரிடம் இருந்து 55,815 ரூபாய் என, 1.66 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் இந்த வகையில் திருடினர்.
இதுகுறித்து, பணத்தை இழந்த மூவரும் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.