/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய் பொன்னேரியில் விபத்து அபாயம்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய் பொன்னேரியில் விபத்து அபாயம்
திறந்தவெளி மழைநீர் கால்வாய் பொன்னேரியில் விபத்து அபாயம்
திறந்தவெளி மழைநீர் கால்வாய் பொன்னேரியில் விபத்து அபாயம்
ADDED : ஜன 07, 2025 07:20 AM

பொன்னேரி :  பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் செட்டி தெருவில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இது பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.
கடந்த, நவம்பரில் பெய்த தொடர் மழையின் காரணமாக, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
குடியிருப்புவாசிகள், 'நகராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாய்கள் முறையாக பராமரிப்பதில்லை' எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, நகராட்சி நிர்வாகம், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையோரத்தில்இருந்த கால்வாய்களை அகலமாக வெட்டி, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றியது.
மழைநீரை வெளியேற்றுவதற்காக, பள்ளங்கள் தோண்டி, ஒரு மாதம் முடிந்த நிலையில், இதுவரை அங்கு மேற்கொண்டு எந்தவொரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, சாலையோரத்தில் கால்வாய் திறந்த நிலையில் கிடக்கிறது. பள்ளங்கள் தோண்டி, அதிலிருந்த மண்ணை சாலையில் கொட்டி வைத்திருப்பதால், சாலை குறுகலாகவும் மாறி உள்ளது.
இதனால், அப்பகுதியில் வாகனங்கள் எதிரெதிரே கடக்கும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. கனரக வாகனங்கள் வரும்போது, எதிரே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி, அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையும் திறந்த நிலையில் இருப்பதால், குடியிருப்புவாசிகள் மரப்பலகை வழியாக பயணிக்கின்றனர்.
வியாபாரிகளும், மரக்கட்டைகளை அடுக்கி, அவற்றின் வழியாக சென்று வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக திறந்த நிலையில் உள்ள மேற்கண்ட மழைநீர் கால்வாயை புதுப்பிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

