/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி நுழைவாயிலில் திறந்தநிலையில் கால்வாய்
/
பள்ளி நுழைவாயிலில் திறந்தநிலையில் கால்வாய்
ADDED : பிப் 03, 2025 02:12 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது தாமரைகுளம் கிராமம். நகர்ப்புறத்தில் இருந்து விலகியுள்ள இந்த கிராமத்தில், 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் வடக்கில் பிரதான வீதியில், அரச தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 60 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் நுழைவாயில் குறுகலாகவும், தெருவை ஒட்டியும் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலை ஒட்டி, தெருவில் கழிவுநீர் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கால்வாயில் இருந்து பரவும் துர்நாற்றத்தால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, பள்ளி நுழைவாயில் பகுதியில் திறந்த நிலையில் உள்ள கால்வாய்க்கு, கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

