/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 09, 2025 12:22 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கமும் ஒன்று. கொசஸ்தலை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து. சாய்கங்கை கால்வாய் வாயிலாக வரும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் முக்கிய நீர் ஆதாரம்.
வடகிழக்குப் பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து ஆகியவற்றால் முழு கொள்ளளவை அடைந்து கடல் போல காட்சியளிக்கிறது.
நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, 3.23 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 35 அடி.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து. வினாடிக்கு, 300 கன அடி நீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக. வினாடிக்கு, 250 கன அடி நீர் திறக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.