ADDED : ஜன 25, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் விற்பனை வாரியத்தால், சோழவரம் வட்டம் ஆரணி, திருவள்ளூர் வட்டம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடங்களின் திறப்பு விழா கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், அந்த இரு கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
பின், 19 விவசாயிகளுக்கு 7.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் உபகரணம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, கலெக்டரின்நேர்முக உதவியாளர் மோகன், வேளாண் உதவி இயக்குநர்கள் ரமேஷ், ஸ்ரீசங்கரி உட்பட பலர்பங்கேற்றனர்.

