/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒன்றிய அலுவலகத்தில் நுழைவு வாயில் திறப்பு
/
ஒன்றிய அலுவலகத்தில் நுழைவு வாயில் திறப்பு
ADDED : ஜன 02, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:ஈக்காடு கிராமத்தில், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 6.85 லட்சம் ரூபாய் மதிப்பில் நுழைவு வாயிலை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பொது நிதியிலிருந்து, 6.85 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நாசர், நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பூந்தமல்லி கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

