/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்
/
திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்
திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்
திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்
ADDED : ஜன 09, 2024 10:22 PM

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கோயம்பேடு என ஐந்து பணிமனைகள் மூலம் 240 அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தி.மு.க, தொழிற்சங்கங்களை தவிர பிற சங்கங்களான. அ.தி.மு.க., சி.ஐ.டி.யூ, என 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று திருவள்ளூரில் அனைத்து பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிமனை எதிரே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில், கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருத்தணி அரசு பணிமனையில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், எஸ்.ஐ., ராக்கிகுமாரி ஆகியோர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாலை, 5:30 மணிக்கு மேல் ஆளும் கட்சி சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் மூலம் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை நுழைவாயிலில், நேற்று காலை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், மண்டல பொறுப்பாளர் உதயசூரியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.
ஊத்துக்கோட்டை அரசு பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர், நேற்று முதல் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 35 பஸ்களும் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கத்தில் இருப்பவர்களை கொண்டு இயக்கப்பட்டன.
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி, திருப்பதி, நாயுடுபேட்டை, நெல்லுார் ஆகிய பகுதிகளுக்கு, தினசரி, 40 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் பயணம்
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட பேருந்துகள், நடைகள் குறைக்கப்பட்டு, 70 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால், நீண்ட நேர இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கும்மிடிப்பூண்டி பகுதிக்கும், கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆந்திரா நோக்கி செல்வதற்காக, பயணிகளும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும், தனியார் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதால், பயணியர் சிரமமில்லாமல் சென்றனர்.
இருப்பினும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அதிகமான பயணியர் வந்து ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
- நமது நிருபர் குழு -

