/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில எல்லை சோதனைச்சாவடியில் பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
/
மாநில எல்லை சோதனைச்சாவடியில் பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
மாநில எல்லை சோதனைச்சாவடியில் பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
மாநில எல்லை சோதனைச்சாவடியில் பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
ADDED : ஜூன் 17, 2025 09:28 PM
திருவள்ளூர்:ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில், மது அருந்திவிட்டு வருவோர் குறித்துகண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கள்ளத்தனமாக மது விற்பனை ஒழித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில் பறிமுதல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது அதிகளவில் வழக்கு பதிய வேண்டும்.
கடைகளில் போதை பொருள் விற்பனை தடுப்பு சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தீவிர விழிப்புணர்வு பிராசாரம் மேற்கொள்ள வேண்டும்.
அருகருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
உணவகம் மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலால் உதவி கமிஷனர் கணேசன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ரேணுகா, முத்துராமன் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.