/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை
/
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை
ADDED : ஏப் 12, 2025 09:31 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் உழவர் சந்தையில் இன்று இயற்கை வேளாண் சந்தை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் வாயிலாக பயிரிடப்படும் ஆரோக்கியமான உணவு மற்றும் இயற்கை வேளாண் விளைபொருட்கள் பெற, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை வேளாண் விளைபொருட்களை இடைத்தரகர் இடையூறின்றி பெறும் வகையில், திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் முயற்சியாக, இன்று காலை இயற்கை வேளாண் சந்தை துவங்க திட்டமிடப்பட்டு காய்கறி, பழ வகைகள், சிறுதானிய மதிப்புக்கூட்டு பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி வகைகள், தேன், வீட்டுத் தோட்ட மாடித் தோட்ட உபகரணங்கள் மற்றும் பனை வெல்லம் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இயற்கை வேளாண் சந்தை ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும், காலை 9:00 - மாலை 6:00 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

