/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓ.எஸ்.ஆர்., நிலத்திற்கான ஆவணங்கள் இல்லை என... கைவிரிப்பு:அதிகாரிகள் பதிலுக்கு தகவல் ஆணையம் கண்டிப்பு
/
ஓ.எஸ்.ஆர்., நிலத்திற்கான ஆவணங்கள் இல்லை என... கைவிரிப்பு:அதிகாரிகள் பதிலுக்கு தகவல் ஆணையம் கண்டிப்பு
ஓ.எஸ்.ஆர்., நிலத்திற்கான ஆவணங்கள் இல்லை என... கைவிரிப்பு:அதிகாரிகள் பதிலுக்கு தகவல் ஆணையம் கண்டிப்பு
ஓ.எஸ்.ஆர்., நிலத்திற்கான ஆவணங்கள் இல்லை என... கைவிரிப்பு:அதிகாரிகள் பதிலுக்கு தகவல் ஆணையம் கண்டிப்பு
ADDED : டிச 15, 2025 04:12 AM

சென்னை;ஆயில்சேரி கிராமத்தில் பொது பயன்பாட்டு நிலமான ஓ.எஸ்.ஆர்., விபரம் பற்றி கேட்கப்பட்ட தகவலுக்கு, 'அடங்கல் மற்றும் நத்தம் பதிவேடு தொடர்பான ஆவணங்கள் இல்லை' என, பொது தகவல் அலுவலர்கள் கைவிரித்த செயலை, மாநில தகவல் ஆணையம் கண்டித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2022ல் சில தகவல்கள் கேட்டு, இரு மனுக்களை விண்ணப்பித்தார்.
ஒரு மனுவில், திருவள்ளூர் மாவட்டம் ஆயில்சேரி கிராமத்திற்கான ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டு நிலம், பதிவேட்டில் உள்ள சர்வே எண், அதன் உரிமையாளர் பெயர் அடங்கிய வருவாய் பதிவேடு நகல் கேட்டிருந்தார்.
பதிவேடு நகல் அத்துடன் ஆயில்சேரி கிராம நத்தம் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண், அடங்கல் எண் படி, அதன் உரிமையாளர் பெயர் அடங்கிய நத்தம் பதிவேடு நகல் ஆகியவற்றையும் கேட்டிருந்தார்.
மற்றொரு மனுவில், ஆயில்சேரி கிராம நத்தம் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில், அடங்கல் எண் 356 முதல் 400 வரை உள்ள சொத்தை சரிபார்க்கவும், அதன் உரிமையாளர் பெயர்களை தெரிந்துகொள்ளவும், பெயர் அடங்கிய வருவாய் பதிவேட்டையும் தகவலாக கேட்டிருந்தார்.
த கவல் கிடைக்கப் பெறாத மனுதாரர், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதன்படி, 2024, ஜன., 30ல், மாநில தகவல் ஆணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தகவல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவலில், மனுதாரருக்கு திருப்தி இல்லை. எனவே, ஆணை நிறைவேற்றாமை மனு தாக்கல் செய்தார். அம்மனு மீது, சமீபத்தில் விசாரணை நடந்தது.
அதில், தமிழக ஆவணக்காப்பகத்தின் ஆராய்ச்சி உதவியாளர் யுவராஜ், திருவள்ளூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், திருவள்ளூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கலைச்செல்வி ஆகியோர் ஆஜராகினர். இம்மூவரும் பொதுத் தகவல் அலுவலராகவும் பதவி வகிக்கின்றனர்.
தமிழக ஆவணக்காப்பகத்தின் ஆராய்ச்சி உதவியாளர் யுவராஜ் கூறுகையில், ''ஆவணக்காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள, ஆயில்சேரி கிராமத்திற்கான ஓ.எஸ்.ஆர்.,ன் 23 பக்கங்கள், மனுதாரருக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள அடங்கல் மற்றும் நத்தம் பதிவேடுகள், ஆவணக்காப்பகத்தில் பராமரிப்பில் இல்லை,'' என்றார்.
அறிக்கை திருவள்ளூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் கூறுகையில், ''திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில், 1911 - 1912ம் ஆண்டுக்கான நில அளவைப் பதிவேடு, 1992ம் ஆண்டுக்கான கிராம நத்தம் தொடர்பான பதிவேடுகள் மட்டுமே உள்ளன.
''மனு தாரர் கோரும், நில அளவைப் பதிவேட்டுக்கு முந்தைய ஆவணங்கள் பதிவறையில் இல்லை' என தெரிவித்தார்.
மேலும், ''1997ல் திருவள்ளூர் மாவட்டம் உருவா க்கப்பட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட பட்டியலில், ஆயில்சேரி கிராமம் தொடர்பான நில அளவை பதிவேடும், 1992ம் ஆண்டுக்கான கிராம நத்தம் தொடர் பான பதிவேடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன.
''மனுதாரர் கோரும் தகவலான, ஓ.எஸ்.ஆர்., பதிவேட்டில் உள்ள அடங்கல் எண் படி, நில உரிமையாளர் பெயர் அடங்கிய வருவாய் பதிவேடு மற்றும் உரிமை பதிவேடுகள் ஒப்படைக்கப்படவில்லை.
''எனவே, மனுதாரர் கோரும் ஆவணங்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில் இல்லை,'' என தெரிவித்தார்.
அதேபோல், திருவள்ளூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கலைச்செல்வி கூறுகையில், ''மனுதாரர் கோரிய, ஆயில்சேரியில் உள்ள குறிப்பிட்ட புல எண்களின், கூட்டுப்புல அறிக்கை பதிவேடு, திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லை,'' என்றார்.
பொது தகவல் இருதரப்பினரையும் விசாரித்த, தகவல் ஆணையர் பிரியகுமார் பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில், மனுதாரரு க்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை. வருவாய் துறை ஆவணங்கள் நிரந்தர ஆவணங்கள் என்பதால், மேற்படி மனுதாரர் கோரும் அடங்கல், நத்தம் பதிவேடு மற்றும் உரிமை பத்திரம் ஆகிய ஆவணங்கள், அலுவலக பராமரிப்பில் இல்லை என, பொதுத் தகவல் அலுவலர்கள் தெ ரிவிப்பதை ஆணையம் ஏற்க மறுக்கிறது.
வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று, மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர்கள் நால்வரும், ஆணையத்தில் வழக்கு குறித்த உரிய ஆவணங்களுடன், நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

