/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டேரி மருந்தக உரிமையாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஓட்டேரி மருந்தக உரிமையாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓட்டேரி மருந்தக உரிமையாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓட்டேரி மருந்தக உரிமையாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 03, 2024 11:38 PM
எழும்பூர்: கடந்த டிச., 29ம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார், ஓட்டேரி பகுதியில் மருந்தக உரிமையாளர் வினோத்குமார் என்பவர், ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகத்தில் உள்ள மருந்து வணிகர்கள் உட்பட, அனைத்து வணிகர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மருந்து கடை உரிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் பொதுச்செயலர் பத்மநாபன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
வினோத்குமார் கொலை குற்றவாளிகளை துாக்கில் போடப்பட வேண்டும்.
கேளம்பாக்கம், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு ரவுடிகளால் அச்சுறுத்தல் உள்ளது.
தமிழகத்தில் வணிகர்களிடம் மாமூல் பெறுவது, உணவகங்களில் சாப்பிடுவதற்கு பணம் கொடுக்காமல் செல்வது, மருந்து வணிகர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே வியாபாரிகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை வைத்தனர்.