/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' ஏரியாவான புறக்காவல் நிலையம்
/
'பார்க்கிங்' ஏரியாவான புறக்காவல் நிலையம்
ADDED : ஏப் 17, 2025 01:41 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில் பேருந்து நிலையம் இல்லை. பஜார் பகுதியே பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பயணியர் நிழற்குடையும் தற்போது வரை கட்டப்படவில்லை.
இந்நிலையில், பஜார் பகுதியில் சோளிங்கர், திருத்தணி, பள்ளிப்பட்டு கூட்டுச்சாலை இணையும் சந்திப்பில், புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில், இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.
சாலை திருப்பத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், புறக்காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காலியிடத்தில், செடி, கொடிகள் வளர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
புறக்காவல் நிலையத்தின் முன்பகுதியில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படாத நேரத்தில், அந்த பகுதியில் பயணியர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
எனவே, புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.