/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு
/
நாராயணபுரத்தில் நிரம்பி வழியும் குப்பை கழிவு
ADDED : மார் 04, 2026 06:23 AM

திருவாலங்காடு: பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாராயணபுரம் கிராமம். இங்கு, 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே உள்ள குண்ணவலம் சாலையில், குப்பை தொட்டி வைக்கப்பட்டு குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை அங்கு கொட்டப்படுகிறது.
இந்த குப்பையை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சரிவர அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குப்பை தொட்டி நிரம்பி, துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
எனவே, சாலையோரம் வைக்கப்பட்டு நிரம்பி வழிந்து வரும் குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

