/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் கடவுப்பாதை சுரங்கப்பாதை பணிகள் கடம்பத்துார் பகுதிவாசிகள் 'திக்.. திக்..' பயணம்

ADDED : அக் 30, 2024 09:45 PM

கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ரயில் நிலையம். இப்பகுதி வாசிகளின் கோரிக்கையை அடுத்து, கடந்த 2015ல் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பால பணி துவங்கியது.
இந்த பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், பகுதிவாசிகள் கடவுப்பாதையை கடந்து செல்ல கடும் அவதிப்பட்டனர்.
கடந்த 2022 டிசம்பரில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், 300 அடி நீளம் 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில், தற்போது சுரங்கப்பாதை பணிகள் இரு ஆண்டுகளாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை மற்றும் நடை மேம்பாலம் இல்லாதாதல், கடம்பத்துார் பகுதிவாசிகள் கடவுப்பாதையை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். சில நேரங்களில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடம்பத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.