ADDED : பிப் 18, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
தி ருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், சிப்பி காளான் வளர்ப்பு குறித்து, வரும் 25ல் ஒரு நாள் கட்டண பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், 590 ரூபாய் கட்டணம் செலுத்தி, காளான் குடில் அமைப்பது, பராமரிப்பது, காளான் படுக்கை தயாரிப்பு, விதை தயாரித்தல் மற்றும் சிப்பி காளான் வளர்க்கும் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, மதிய உணவு, பயிற்சி நிறைவு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
தொடர்புக்கு: - சி.பானுமதி, 97910 15355.
