/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதல் நிலையம் வேலஞ்சேரியில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் வேலஞ்சேரியில் திறப்பு
ADDED : ஏப் 04, 2025 02:32 AM

திருத்தணி:திருத்தணி தாலுக்காவில் விவசாயிகள் நெல், கரும்பு, வேர்கடலை, காய்கறி மற்றும் சவுக்கு போன்றவை பயிரிடுகின்றனர். இதில், நெல் அதிகளவில் பயிரிடுகின்றனர். தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளதால், கலெக்டரிடம் விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடந்த பத்து நாட்களுக்கு முன் திருத்தணி ஒன்றியத்தில், மூன்று நெல்கொள்முதல் நிலையங்களில் திருத்தணி நகரத்தில் உள்ள ஒரு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மீதமுள்ள வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இரு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் நெல்லை பாதுகாக்கவும், விற்பனை செய்வதற்கு முடியாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில், நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று வேளாண் துறையினர் வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

