/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்பாபா கோவில்களில் இன்று படித் திருவிழா
/
சாய்பாபா கோவில்களில் இன்று படித் திருவிழா
ADDED : டிச 31, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில், உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் இன்று, படித் திருவிழாவும், நாளை, புத்தாண்டு தரிசனமும் நடைபெறுகிறது.
இன்று, படித் திருவிழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடக்கிறது.
படித் திருவிழாவையொட்டி இன்று முதல், நாளை புத்தாண்டு இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில் நடை திறந்திருக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.