ADDED : ஜன 26, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற பெயின்டர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் சாமிநாதன், 38; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, தச்சூரில் இருந்து முக்கரம்பாக்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கை அவரது நண்பர் குமார், 36, என்பவர் ஓட்டினார். சாமிநாதன் பின்னால் அமர்ந்து சென்றார். கவரைப்பேட்டை அடுத்த போரக்ஸ் நகர் அருகே, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.
இந்த விபத்தில், சாமிநாதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
