/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 21ல் ஓவிய போட்டி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 21ல் ஓவிய போட்டி
ADDED : நவ 19, 2025 05:20 AM
திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, வரும் 21ம் தேதி ஓவிய போட்டி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 21ம் தேதி ஓவிய போட்டி நடைபெற உள்ளது. செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடையோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம்.
இதில், ௧௦ வயதிற்கு கீழ் கிரேயான்ஸ் மற்றும் கலர் பென்சில், 11 - -18 வயதிற்குட்பட்டோர் 'வாட்டர் கலர்' மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் தங்கள் விருப்பப்படி எந்த பொருளை வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையலாம்.
இதற்கான 'சார்ட் பேப்பர்' பயனாளிகள் கொண்டுவர வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே, 1,000, 500 மற்றும் 250 ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

