/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழனிசாமிக்கு வெள்ளிவேல் பரிசு
/
பழனிசாமிக்கு வெள்ளிவேல் பரிசு
ADDED : ஜன 02, 2026 05:30 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி கவரைப்பேட்டையில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலளருமான பழனிசாமி சமீபத்தில் பங்கேற்று பேசினார்.
பிரசாரத்திற்கு வந்த அவருக்கு, ஜெ.என்.என். கல்லுாரி நிறுவன தலைவரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலளருமான எஸ்.ஜெயச்சந்திரன் தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சிறுணியம் பி.பலராமன் முன்னிலையில் வெள்ளிவேல் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

