/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டுமனைகளை அளந்து கொடுக்க ஊராட்சி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
வீட்டுமனைகளை அளந்து கொடுக்க ஊராட்சி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனைகளை அளந்து கொடுக்க ஊராட்சி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனைகளை அளந்து கொடுக்க ஊராட்சி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 05, 2025 02:32 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், 18 ஆண்டுகளுக்கு முன், 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசு சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அதே போல, கே.ஜி.கண்டிகை ஊராட்சியில், 15க்கும் மேற்பட்டோருக்கும் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், இதுவரை வீட்டுமனைகளை அளந்து கொடுக்காததால் பயனாளிகள் வீடுகள் கட்ட முடியாமல் பலமுறை வருவாய் துறையினரிடம் அளந்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் நேற்று, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை மனுவும் வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்ற கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதற்காக உறுதி கூறினார்.