/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா கொடியேற்றம்
/
அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா கொடியேற்றம்
ADDED : மார் 17, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விநாயக பெருமான், அகத்தீஸ்வரர், ஆனந்தவள்ளி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அகத்தீஸ்வரர் பெருமானை வழிபட்டு சென்றனர். உற்சவர் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் மாடவீதிகள் வழியாக திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இரவு, அன்னவாகன காட்சியும், திருவீதி உலாவும் நடந்தது.

