தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துணை ராணுவப்படை திருவள்ளூருக்கு வருகை

 துணை ராணுவப்படை திருவள்ளூருக்கு வருகை

 துணை ராணுவப்படை திருவள்ளூருக்கு வருகை


ADDED : மார் 11, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், துணை ராணுவப்படை வீரர்கள் திருவள்ளூருக்கு வருகை தந்தனர்.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.

இதையடுத்து, தமிழக தேர்தல் பணிக்கு, உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு உதவி கமாண்டர் கார்த்திகேயன் தலைமையில், 90 துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

துணை ராணுவ படை வீரர்களை, திருவள்ளூர் மாவட்ட ஆவண காப்பக டி.எஸ்.பி., ராஜபாண்டி தலைமையிலான போலீசார், திருவள்ளூருக்கு அழைத்து வந்து கனகவல்லிபுரத்தில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைத்தனர்.

மேலும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் இருக்க, மக்களின் பயத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், 360 துணை ராணுவப்படை வீரர்கள் வரவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us