தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு


ADDED : மார் 12, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூரில் துணை ராணுவப்படை வீரர்கள் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.

இதையடுத்து, தேர்தல் பணிக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு 90 துணை ராணுவ படையினர், கடந்த 9ம் தேதி மாலை வந்தனர்.

அவர்கள், திருவள்ளூர் கனகவல்லிபுரம் காவல் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று மாலை அமைதியான வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் தலைமையில், துணை ராணுவ படையினர், 40 போலீசாருடன் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே துவங்கிய கொடி அணிவகுப்பு, திருவள்ளூர் பேருந்து நிலையம், தேரடி, மோதிலால் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us