ADDED : மார் 19, 2026 06:08 AM

அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: சட்டசபை தேர்தலையொட்டி, ஊத்துக்கோட்டையில் துணை ராணுவப்படை அணிவகுப்பு நடந்தது.
தமிழகத்தில் ஏப்., 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டைக்கு, 68 பேர் கொண்ட ஒரு குழுவினர், ஆய்வாளர் சவுரப்ராய் தலைமையில் வந்தனர். நேற்று மாலை, திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., கல்யாண் தலைமையில், டி.எஸ்.பி., ராஜா மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள், நாகலாபுரம் சாலையில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கி, பஜார் வழியே காவல் நிலையம் வரை அணிவகுப்பு நடத்தினர்.
