/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரந்துார் விமான நிலைய திட்டம் 5,700 ஏக்கர் 24 யூனிட்டுகளாக பிரிப்பு
/
பரந்துார் விமான நிலைய திட்டம் 5,700 ஏக்கர் 24 யூனிட்டுகளாக பிரிப்பு
பரந்துார் விமான நிலைய திட்டம் 5,700 ஏக்கர் 24 யூனிட்டுகளாக பிரிப்பு
பரந்துார் விமான நிலைய திட்டம் 5,700 ஏக்கர் 24 யூனிட்டுகளாக பிரிப்பு
ADDED : பிப் 16, 2024 12:02 AM
காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாவிலும், இதில், 3,700 ஏக்கர் நிலம் விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள, 2,000 ஏக்கர் நீர்நிலையாகவும், அரசு நிலமாகவும் உள்ளது.
இத்திட்டத்திற்கான அறிவிப்பு, 2022ல் வெளியானது. கடந்தாண்டு அக்டோபர் இறுதியில், விமான நிலைய திட்டத்திற்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.
இத்திட்டத்திற்கு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், மூன்று துணை கலெக்டர்கள், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், தட்டச்சர்கள் என, 324 பேர் பணியாற்ற உள்ளனர்.
இப்பணியாளர்கள், 24 யூனிட்களாக செயல்பட உள்ளனர். ஒவ்வொரு யூனிட்டிலும், ஒரு தாசில்தார், சர்வேயர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்றுவர்.
அந்த வகையில், பரந்துார் சுற்றி விமான நிலையம் அமைய உள்ள, 5,700 ஏக்கர் நிலத்தை, 24 யூனிட்டுகளாக வருவாய்த் துறையினர் பிரித்துள்ளனர்.
ஏற்கனவே, ஒரு மாவட்ட வருவாய் அலுவலர், இரு துணை கலெக்டர்கள், 10 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் பல்வேறு ஊழியர்களை நியமிக்க உயரதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர்.