ADDED : பிப் 09, 2025 12:23 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரேஸ்புரம் ---- வேணுகோபாலபுரம் வரையிலான தார்ச்சாலை 2 கி.மீ., தூரம் உடையது. இச்சாலை வழியாக இரண்டு கிராமத்தைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பணிகளுக்கு, திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு வந்து, அங்கிருந்து பேருந்துகள் வாயிலாக, திருவாலங்காடு, அரக்கோணம், திருவள்ளூர் நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பரேஸ்புரம்-- -- வேணுகோபாலபுரம் வரையிலான 2 கி.மீ., துாரம் ஒன்றிய தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலை முறையாக பராமரிக்காததால், தற்போது பழுதடைந்து, தார்ச்சாலை, மண் சாலையாக மாறி, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
ஆங்காங்கே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
எனவே, இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

