தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெற்றோர் கண்டிப்பு: மாணவன் தற்கொலை

 பெற்றோர் கண்டிப்பு: மாணவன் தற்கொலை

 பெற்றோர் கண்டிப்பு: மாணவன் தற்கொலை


ADDED : மார் 03, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி அருகே கல் வி உதவித்தொகை பணத்தை செலவு செய்ததை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த கல்லுாரி மாணவன், சுடுகாட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

திருத்த ணி அடுத்த சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் தமிழரசு, 19; இரண்டாமாண்டு கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சிங்கராஜபுரம் சுடுகாட்டில் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் விரைந்து சென்றனர்.

அங்குள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கோபாலகிருஷ்ணன் மகன் தமிழரசு என தெரிந்தது. மேலும், இந்தாண்டிற்கான அரசு உதவித்தொகை 30,000 ரூபாய், அவரது வங்கி கணக்கிற்கு வந்தது. இப்பணத்தை பெற்றோருக்கு தெரியாமல் செலவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக, பெற்றோர் தமிழரசை கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழரசு, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us