ADDED : ஏப் 16, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
மே ட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' ஏரியாவாக மாறியுள்ளது.
பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் அரசு பள்ளி நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணியர் நிழற்குடை, பழுதடைந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
இதனால், திருத்தணி, கனகம்மாசத்திரம் மற்றும் திருவள்ளூர் செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மழை, வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்-.
