/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்க முடிவு
/
அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்க முடிவு
அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்க முடிவு
அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்க முடிவு
ADDED : ஏப் 14, 2025 01:18 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன், 25 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு, அவரது பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் போது, அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், தலித் மக்கள் முண்ணனி அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட கலெக்டர் பிரதாப்பை சந்தித்து, நகராட்சி அலுவலகம் முன் அம்பேத்கர் சிலை அமைத்த பீடம் சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும் என, மனு அளித்தார்.
மனுவை பெற்ற கலெக்டர், திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி, ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, டி.எஸ்.பி., கந்தன் மற்றும் தாசில்தார் மலர்விழி ஆகியோர், அம்பேத்கர் சிலை பகுதியில் ஆய்வு செய்த போது, சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் சேதமடைந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கலெக்டருக்கு, ஆர்.டி.ஓ., மற்றும் டி.எஸ்.பி., ஆய்வறிக்கை அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் டி.எஸ்.பி., கந்தன் மற்றும் தாசில்தார் மலர்விழி ஆகியோர் தலைமையில், அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் நடந்தது.
டி.எஸ்.பி., கந்தன், தாசில்தார் மலர்விழி ஆகியோர் கூறியதாவது:
அம்பேத்கர் சிலை பீடம் சேதமடைந்துள்ளதால், அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, அரசு சார்பில் மலர் மாலை அணிவிக்கப்படும். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தனியார் அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி இல்லை.
அதற்கு பதிலாக, அங்கேயே அம்பேத்கர் திருவுருவப் படம் வைத்து, படத்திற்கு மாலை அணிவிக்கலாம். விரைவில் பழுதடைந்த அம்பேத்கர் பீடத்தை அகற்றி, புதிதாக கட்டிய பின், அம்பேத்கர் சிலை நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.