/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகரியில் பார்வேட்டை விழா 24 உற்சவர்கள் சந்திப்பு
/
நகரியில் பார்வேட்டை விழா 24 உற்சவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 18, 2025 02:17 AM

நகரி:சித்துார் மாவட்டம், நகரி மண்டபம் அருகே, ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, நகரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 24 உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து, சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அந்த வகையில், நகரி மண்டபம் அருகே, வழிதுணை விநாயகர் கோவில் வளாகத்தில், மலைச்சுற்று விழா மற்றும் பார்வேட்டை உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், உற்சவர்கள் நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள், கரிம்பேடு நாததீஸ்வரர், நகரி அகத்தீஸ்வரர் உட்பட 24 உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமிக்கு தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.