தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பயணியர் நிழற்குடை படுமோசம் அச்சத்தில் தவிக்கும் பயணியர்

பயணியர் நிழற்குடை படுமோசம் அச்சத்தில் தவிக்கும் பயணியர்

பயணியர் நிழற்குடை படுமோசம் அச்சத்தில் தவிக்கும் பயணியர்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பரம்பாக்கம்: பாப்பரம்பாக்கத்தில் பயணியர் நிழற்குடை சேதமடைந்து, படுமோசமான நிலையில் உள்ளதால், பயணியர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அரண்வாயல் – ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், 15 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழற்குடை போதிய பராமரிப்பில்லாததால், ஆங்காங்கே விரிசலடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், பயணியர் அச்சத்துடன் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us