/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக காத்திருந்து பஸ் பிடிக்கும் பயணியர்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக காத்திருந்து பஸ் பிடிக்கும் பயணியர்
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக காத்திருந்து பஸ் பிடிக்கும் பயணியர்
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக காத்திருந்து பஸ் பிடிக்கும் பயணியர்
UPDATED : பிப் 18, 2025 07:32 AM
ADDED : பிப் 17, 2025 11:05 PM

கும்மிடிப்பூண்டி: சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே, புதுவாயல் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சிறுவாபுரி மற்றும் பெரியபாளையம் கோவில் பக்தர்கள் என, பல்லாயிரக்கணக்கான பேருந்து பயணியர் கூடும் முக்கிய சந்திப்பு பகுதியாகும்.
அந்த இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மற்றும் ஆந்திரா மார்க்கமாக, செல்லும் பயணியர், அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அங்குள்ள இணைப்பு சாலைகளை பேருந்துகள் தவிர்ப்பதால், தேசிய நெடுஞ்சாலையில்,ஆபத்தாக காத்திருந்து பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய நிலையில் பயணியர் உள்ளனர்.
பலர், ஆபத்தின் விளிம்பில் சாலையை கடந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, பேருந்துகள் அனைத்தும் இணைப்பு சாலை வழியாக இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.