/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருக்கை வசதி ஏற்படுத்தாமல் ரூ.1.50 கோடியில் பஸ் நிலையம் பொதட்டூர்பேட்டையில் பயணியர் புலம்பல்

ADDED : நவ 27, 2025 03:27 AM

பொதட்டூர்பேட்டை: நவ. 27--: உயரமான கூரையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி இல்லாததால், பயணியர் புலம்பி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், சமீபத்தில் 1.50 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. இதில், 25 அடி உயரத்தில் இரும்பு கூரையும், 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் அமைந்துள்ளன.
கடந்த செவ்வாய்க் கிழமை இதற்கான திறப்பு விழா நடந்தது. துணை முதல்வர் உதயநிதி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிலையத்தில், பயணியர் அமர இருக்கை வசதி அமைக்கப்படவில்லை. இதனால், தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறையின் கதவுகளும், அங்குள்ள இருக்கைளும் சேதமடைந்துள்ளன.
நேர காப்பாளர் அலுவலகமும் மூடியே கிடக்கிறது. இதனால், பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பேருந்து நிலையத்தில் நேர காப்பாளர் அலுவலகம், பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறைகளை சீரமைத்து, இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.