/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் பேருந்து நிலையம் அமைக்க பயணியர் கோரிக்கை
/
பழவேற்காடில் பேருந்து நிலையம் அமைக்க பயணியர் கோரிக்கை
பழவேற்காடில் பேருந்து நிலையம் அமைக்க பயணியர் கோரிக்கை
பழவேற்காடில் பேருந்து நிலையம் அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : அக் 08, 2024 01:08 AM
பழவேற்காடு, பொன்னேரி, செங்குன்றம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து, பழவேற்காடு மீனவப்பகுதிக்கு அரசு மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக தினமும், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை பழவேற்காடு பஜார் பகுதியில் உள்ள சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணியர், மீன்வியாபாரிகள், பொதுமக்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஜார் பகுதியில், நிறுத்தி வைக்கப்படும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோட்டைகுப்பம், நடுவூர்மாதகுப்பம் செல்லும் சாலையிலும் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
அடுத்தடுத்து பேருந்துகள் வரும்போது அங்கு நிறுத்துவதற்கு இடமில்லாமல் டிரைவர்கள் தடுமாறுகின்றனர்.
பழவேற்காடு பஜார் செல்லும் வாகனங்கள் பேருந்துகளை உரசியபடி செல்ல வேண்டிய நிலையில், வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது.
பழவேற்காடு பகுதியில் பேருந்துகள் நிறுத்துவதற்கு, பயணியர் அமர்வதற்கும் பேருந்து நிலையம் அமைத்து தரவேண்டும் என பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.