/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லண்டன் விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
/
லண்டன் விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
லண்டன் விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
லண்டன் விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
ADDED : டிச 04, 2024 11:27 PM
சென்னை,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து, சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 320 பேருடன் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது.
லண்டன் வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அபாய அலாரம் அடித்துள்ளது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானி உடனடியாக விமானத்தை லண்டன் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். பயணியர் பத்திரமாக இறங்கி, தங்க வைக்கப்பட்டனர்.
பொறியாளர்கள் குழு விமானத்தை சரி செய்யும் பணியில் இறங்கியது. பழுது நீக்கப்பட்டு, 8 மணி நேரம் கழித்து, விமானம் சென்னைக்கு புறப்பட்டது. விமானம் வழக்கமாக காலை, 5:40 மணிக்கு சென்னை வரும். ஆனால், நேற்று தாமதமாக மதியம் 1:00 மணிக்கு வந்தது.
குறித்த நேரத்தில் லண்டனில் இருந்து பயணியர் சென்னை வர முடியாமலும், இங்கிருந்து லண்டன் செல்ல முடியாமலும் பயணியர் சிரமப்பட்டனர்.