/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதி இல்லாத பட்டாபிராமபுரம் சுடுகாடு
/
அடிப்படை வசதி இல்லாத பட்டாபிராமபுரம் சுடுகாடு
ADDED : ஏப் 28, 2025 02:02 AM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் கிராமத்திற்கு கிழக்கு புறத்தில், நான்கரை ஏக்கர் பரப்பில் சுடுகாடு ஏற்படுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டில் ஆழ்துளை கிணறும், எரிமேடையும் அமைத்துள்ளன.
ஆனால் முறையாக பராமரிக்காததால் தற்போது முட்செடிகள் வளர்ந்தும், சுடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய சாலை வசதியும் இல்லாததால் சிரமமாக உள்ளது.
இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் சுடுகாட்டில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம், சுடுகாடிற்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

