/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கல்யாண ராமர் கோவிலில் பட்டாபிஷேகம்
/
திருத்தணி கல்யாண ராமர் கோவிலில் பட்டாபிஷேகம்
ADDED : ஏப் 15, 2025 06:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி, மடம் கிராமம் அனுமந்தபுரம் தெருவில் கல்யாண ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 58வது ஆண்டு ராமநவமியை ஒட்டி, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, 8ம் தேதி சீதா-ராமர் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருத்தணியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10:30 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று நண்பகல் உரி அடித்தல், மாலை வசந்த உற்சவம், விடையாற்றி உற்சவம் மற்றும் உற்சவர் வீதியுலாவுடன் ராமநவமி ஆண்டு விழா நிறைவுபெறுகிறது.

