/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அறிவுசார் நகரத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
/
அறிவுசார் நகரத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 13, 2024 06:31 AM
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, 200 கோடி ரூபாய் மதிப்பில் 1,703 ஏக்கர் பரப்பில், தமிழ்நாடு அறிவுசார் நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டு, ஆரம்ப கட்ட பணி துவங்கி நடந்து வருகிறது. கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்தகுளம், எர்ணாங்குப்பம் மற்றும் வெங்கல் ஆகிய ஆறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் மூன்று போகம் விளைச்சல் தரும் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்த அவர்கள் கூறுகையில், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.