தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனுமதியின்றி இயங்கிய ஆந்திர வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி இயங்கிய ஆந்திர வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி இயங்கிய ஆந்திர வாகனங்களுக்கு அபராதம்


ADDED : நவ 08, 2024 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:அனுமதியின்றி இயங்கிய ஆந்திர மாநில வாகனங்களுக்கு போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்தனர்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட நான்கு மினி பேருந்துகள் வந்தன. அதனை நிறுத்தி சோதனையிட்டதில், முறையாக அனுமதி இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும், திருத்தணி பகுதியைச் சேர்ந்தோர் சுப விசேஷத்திற்காக இந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியதாக கூறினர்.

இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், முறையான அனுமதியின்றி இயங்கிய 3 வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், உரிய அனுமதியுடன் வாகனங்களில் பயணிக்குமாறு, வாகனத்தில் வந்தோருக்கு அறிவுரை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us