ADDED : ஜன 28, 2026 07:38 AM

அ நிறம் | அளவு
திருத்தணி. ஜன. 28--: திருத்தணி ரயில் நிலையம் அருகே, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், திருத்தணி ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை, ஊராட்சி செயலர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான சிகிச்சை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதேபோல், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆர்.கே.பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
