/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம்
/
திருத்தணியில் ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம்
ADDED : டிச 18, 2024 12:12 AM

திருத்தணி:திருத்தணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலகத்தில், திருத்தணி கிளை செயற்குழுக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர் உரிமைநாள் விழா, கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட துணை தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணை செயலர் ஏகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் நடந்து முடிந்த பேரவை கூட்டம் அறிக்கையை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று, வரவு - செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டது.
மேலும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஊதிய உயர்வு கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதை நிறைவேற்ற வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினராக துரைராஜ், மாநில பேரவை உறுப்பினராக தசரதன் ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.