/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவாளநகர் சாலைகளில் கழிவுநீர் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
/
மணவாளநகர் சாலைகளில் கழிவுநீர் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
மணவாளநகர் சாலைகளில் கழிவுநீர் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
மணவாளநகர் சாலைகளில் கழிவுநீர் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
ADDED : ஜூலை 28, 2025 11:23 PM

மணவாளநகர், மணவாளநகர் பகுதியில் சேதமடைந்த சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயத்தில் பகுதிமக்கள் தவித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சியில் மணவாளநகர் அமைந்துள்ளது. இப்பகுதியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணாநகர், அன்பழகன் தெரு உட்பட பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மேலும், கழிவுநீர் கால்வாயும் திறந்தநிலையில் உள்ளதால், மழைநீருடன், கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமென, மணவாளநகர் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.