/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா போதையில் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்
/
கஞ்சா போதையில் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்
கஞ்சா போதையில் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்
கஞ்சா போதையில் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்
ADDED : ஜன 03, 2026 05:45 AM
திருத்தணி: 'கஞ்சா போதையில் வா லிபர்கள் அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும்' என, திருத்தணி தி.மு. க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம், குமரன் நகர் மக்கள் புகார் தெரிவித்தனர்.
திருத்தணி நகராட்சி முருகப்ப நகர் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி கவுன்சிலர் குமுதா பரிந்துரையின்படி, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து, கழிப்பறை வசதி ஏற்படுத்த, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, நேற்று எம்.எல்.ஏ., பணி களை துவக்கி வை த்தார்.
அப்போது, குமரன் நகர் மற்றும் முருகப்ப நகர் பகுதி மக்கள், எம்.எல்.ஏ., சந்திரனிடம், 'எங்கள் பகுதியில் கஞ்சா போதையில் தினமும் வாலிபர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், வெளியே செல்வதற்கு அச்சமாக உள்ளது.
'க ஞ்சா வாலிபர்கள் அட்ட காசத்தை கட்டுப்படுத்த வே ண்டும்' என, கோரிக்கை வைத்தனர். உடனே, எம்.எல்.ஏ., திருத்தணி டி.எஸ்.பி.,யிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

