/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதுகாப்பு இல்லாத நெடுஞ்சாலை தொடரும் விபத்தால் மக்கள் அச்சம் ஒரே மாதத்தில் 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்

ADDED : ஜூலை 20, 2025 10:42 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் நான்கு வழிச்சாலையில், ஒரே மாதத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார், இருசக்கர வாகனம் மோதியதில், இருவர் உயிரிழந்த நிலையில், பல்வேறு விபத்துகளில், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது, அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., துாரம் உடையது.
திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து, அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலையை, முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்தாண்டு ஒப்புதல் கிடைத்தது.
அதன்படி, முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், 68 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.
திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட இச்சாலையில், வீரராகவபுரம், மாதா கோவில், வியாசபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலையில், கடந்த ஒரு மாதத்தில் ஆறு விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வீரராகவபுரம் கிராம மக்கள் கூறியதாவது:
மின்விளக்கு வசதி இல்லாததால், நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பேருந்துக்காக காத்திருப்பவர்களை கவனிக்க முடியாமல் விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால், இரவில் நான்கு வழிச்சாலையில் நடக்கவே அச்சமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோர கிராமங்களில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.