/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை: அய்யனார் அவென்யூ மக்கள் அதிருப்தி
/
தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை: அய்யனார் அவென்யூ மக்கள் அதிருப்தி
தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை: அய்யனார் அவென்யூ மக்கள் அதிருப்தி
தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை: அய்யனார் அவென்யூ மக்கள் அதிருப்தி
UPDATED : டிச 25, 2025 08:07 AM
ADDED : டிச 25, 2025 06:54 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி சார்பில், அய்யனார் அவென்யூவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமில்லாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டது அய்யனார் அவென்யூ. இங்குள்ள 16வது வார்டுக்கு உட்பட்ட அய்யனார் அவென்யூ, ஜே.என்.சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம், நீர்வளத்துறை கால்வாயை ஒட்டி அமைந்துள்ள சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியது.
சில இடங்களில் தார் மற்றும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, நகராட்சி சார்பில் சில நாட்களுக்கு முன், சேதமடைந்த பகுதியை 'பேட்ச் ஒர்க்' முறையில் சீரமைத்தனர்.
ஆனால், தரமற்ற முறையில் தார் கலவையில்லாமல் அமைக்கப்பட்டதால், இரண்டு நாட்களிலேயே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் பரவியுள்ளது.
இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பாதசாரிகளும் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, தரமற்ற வகையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

