/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஏலியம்பேடு மக்கள் போராட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஏலியம்பேடு மக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா கேட்டு ஏலியம்பேடு மக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா கேட்டு ஏலியம்பேடு மக்கள் போராட்டம்
ADDED : மே 28, 2025 11:37 PM

பொன்னேரி,பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அங்குள்ள கிராம நத்தம் அரசு நிலத்தில் வசித்து வருகின்றனர்.
இங்கு, மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, தொடர்ந்து வருவாய்த் துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
கிராமவாசிகளின் கோரிக்கை மீது வருவாய்த் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று வட்டாட்சியர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ஜானகிராமன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கிராமவாசிகள், வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம், காவல் உதவி கமிஷனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
ஏலியம்பேடு கிராமவாசிகளின் வீட்டுமனை பட்டா தொடர்பான கோப்புகள் பரிசீலனையில் உள்ளதாகவும், 10 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் வருவாய்த் துறையினர் உறுதி அளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், '10 நாட்கள் அல்ல, கூடுதலாக 10 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் பட்டா கிடைக்காவிட்டால் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம்' எனக் கூறிவிட்டு, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.