தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாதையை மறித்து சுற்றுச்சுவர் :அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

 பாதையை மறித்து சுற்றுச்சுவர் :அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

 பாதையை மறித்து சுற்றுச்சுவர் :அகற்றக்கோரி மக்கள் போராட்டம்


ADDED : டிச 21, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொதுப் பாதையை மறித்து, தனிநபர் அமைத்துள்ள சுற்றுச்சுவரை அகற்ற கோரி குடியிருப்பு மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ., நகர் ஏரிக்கரை அருகே, பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு வசிப்போர், அங்குள்ள பொதுப் பாதையை பயன்படுத்தி, பொன்னேரி நகர் பகுதிக்கு சென்று வந்த நிலையில், தனிநபர் ஒருவர் அதை மறித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளார். இதனால், குடியிருப்பு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, பொன்னேரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று மாலை துாய்மை பணியாளர்கள், தனிநபர் அமைத்துள்ள சுற்றுச்சுவரை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நகராட்சி கமிஷனர் தனலட்சுமி பேச்சு நடத்தி, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us