பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி
பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி
ADDED : பிப் 19, 2026 05:38 AM

கடம்பத்துார்: கடம்பத்துாரில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தை, அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பத்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, 2011-12ம் ஆண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை பகுதிமக்கள் மற்றும் இங்குள்ள சந்தைக்கு வரும் வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்த சுகாதார வளாகம், பயன்பாடில்லாமல் பூட்டியே கிடக்கிறது.
அருகிலேயே ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகம் இருந்தும், சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனால், பகுதி மக்களும், சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பயன் படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
