/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் முறையீடு
/
பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் முறையீடு
பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் முறையீடு
பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் முறையீடு
ADDED : செப் 24, 2024 07:24 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் உள்ளது எட்டிக்குளம் பகுதி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியதால், ஒரு வழிச்சாலையாக உள்ளது. குண்டும், குழியுமாக இருந்த சாலையில் நடக்க, டூ- வீலர்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இப்பகுதியில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி பொது நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆறு மாதத்திற்கு முன் துவங்கிய சிமென்ட் சாலைப் பணி பாதி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடிக்காமல் உள்ளது.
நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழாவிற்கு வந்த கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீதை அழைத்து ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை அகற்றி சாலைப்பணி துவக்கி விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.